சாமுத்ரிகா லட்சணம் என்பது மிக சிறப்பான ஒன்று. அதாவது அங்க அடையாளங்கள் என்று சொல்லலாம். அங்கங்களின் அமைப்பு. இதில் பிரதானமாக அமைவது மூக்கும், கண்களும்தான். கண்களுக்கு மட்டுமே 100 முதல் 120 குறிப்புகள் சாமுத்ரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக விரல் அமைப்புகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. நீண்ட விரல்கள் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் அறிவாளிகளாகவும், சமயோசித புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.கைகள் நீண்டு இருந்தாலும் சிறப்பானது என்று சொல்லப்பட்டுள்ளது.
காமராஜர், நேருவிற்கு எல்லாம் கைகள் நீண்டு கால் முட்டியை அவர்கள் கை தொடும் என்று சொல்வார்கள். நீண்ட விரல்கள், நீண்ட கைகளும் ராஜ யோகம், நாடாளும் யோகம் கொண்டது என்று சொல்வார்கள்.
காலின் கட்டை விரல் எந்த அளவிற்கு கனமாக இல்லாமல் இருக்கிறதோ அந்த அளவிற்கு நல்லது என்று சொல்வார்கள். கட்டை விரலின் தடுத்து, உருண்டு காணப்படுவதை விட மெல்லிய விரலாக இருப்பது நல்லது.இரண்டாம் விரலை விட சற்று தடிமனாக கட்டை விரல் இருந்தாலே போதும் என்று சொல்கிறார்கள்.
கட்டை விரல் வலது பக்கமாகத் திரும்பியிருக்கும், அதாவது வலது காலின் கட்டை விரல் வலது பக்கமாகவும், இடது காலின் கட்டை விரல் நுனி இடது பக்கமாகவும் சற்று திரும்பியபடி இருப்பவர்கள் சூட்சும சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆவிகளை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
Saturday, October 31, 2009
Subscribe to:
Comments (Atom)